இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, குமரிக்கடலை ஒட்டிய வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.