10 ஆம் தேதி வரை கனமழை: இன்று எங்கெங்கு தெரியுமா?

வியாழன், 7 அக்டோபர் 2021 (09:09 IST)
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
 
ஆம் தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யுமாம். மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்த வரை ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் 10 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிகப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்