வெதர் அப்டேட்: அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை!!

திங்கள், 21 டிசம்பர் 2020 (10:13 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வரும் 48 மணி நேரத்திற்கு குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும், டிசம்பர் 22 ஆம் தேதி மாலத்தீவு பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்