இடி + மழை: க்ளைமேட் எப்படி இருக்க போகுதோ...

புதன், 15 ஏப்ரல் 2020 (13:09 IST)
தமிழகத்தில் நாளை முதல் 19 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்தது போல மழை பெய்தது. தற்போது அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக தகவல் தெவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நாளை முதல் 19 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்