ஆம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.