தமிழகத்தில் மழை எப்படி? வானிலை மையம் தகவல்

சனி, 5 பிப்ரவரி 2022 (12:39 IST)
இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரி களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தென்மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
தென்மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்