சூறைக் காற்று வீச... பில்டப்புடன் வரும் கன மழை!

வியாழன், 19 டிசம்பர் 2019 (14:03 IST)
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை சில நாட்களாக மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையில் சில நாட்கள் மிதமான மழை பெய்து வந்தது.
 
இந்நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வருகிற 20 ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழையும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சென்னையில் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறைக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்