நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை - சபாநாயகர் அறிவிப்பு

சனி, 5 பிப்ரவரி 2022 (20:13 IST)
நீட் விலக்கு மசோதா தொடர்பாக  பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக சபா நாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து குறித்த மசோதாவை ஆளுநர் ரவி அவர்கள்  சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இ ந் நிலையில் ஆளு நரைத் திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கரி 8 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு  அவர்கள் கூட்டியுள்ளதாக  செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்