பிரதமர் திட்டத்தில் வீடு கிடைக்கல.. வருந்திய பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Prasanth Karthick

சனி, 9 மார்ச் 2024 (12:15 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலில் விழுந்து வணங்கிய மதுரை சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் உடனடியாக வீடுகட்டித் தர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளையை கடந்த 2000ம் ஆண்டு சந்தித்து ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது வழங்கி காலை தொட்டு வணங்கினார். பின்னர் மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தற்போது வீடு இல்லாமல் சின்னப்பிள்ளை கஷ்டப்படும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கும் ஒரு வீடு வழங்கப்படும் என சொல்லப்பட்டதாகவும், ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ALSO READ: நடிகர் விஜய் கட்சியில் 15 மணி நேரத்துக்குள் இவ்வளவு உறுப்பினர் சேர்க்கையா? – நிர்வாகிகள் அளித்த அடடே தகவல்!

இதுகுறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு உடனடியாக தமிழக அரசின் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் மூலமாக வீடு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு “பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்