தமிழக அரசின் மனுவில் பிழை..விசாரணைக்கு எடுக்க இயலாது - உயர் நீதிமன்றம்
திங்கள், 11 மே 2020 (15:09 IST)
தமிழகத்தில்உள்ளபெரும்பாலானடாஸ்மாக்கடைகளிலும்சமூகவிலகலைபின்பற்றவில்லைஎன்பதுசமூகவலைத்தளங்களில்வெளியானவீடியோக்களில் இருந்துதெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 8 ஆம் தேதி மாலை சென்னைஉயர்நீதிமன்றம் அதிரடியாகஒருசிலஉத்தரவுகளைபிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த உத்தரவால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய அரசியல் கட்சிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
இந்நிலையில், நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில்,
டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில். இன்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் மனுவில் பிழை: உச்சநீதிமன்றம்' பிழையை சரி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டால் நாளையே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை. அந்த மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.