தமிழக விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு

திங்கள், 14 பிப்ரவரி 2022 (08:57 IST)
திருச்சியில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காகச் சென்ற தமிழக விவசாயிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். இது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் மத்திய அரசு அவர்களின் கோரிகைக்குச் செவிசாய்த்தது.

இந்நிலையில், திருச்சியில் இருந்து டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு தலைமையில் இன்று  தமிழக விவசாயிகள் சென்றனர். அப்போது, ரயில் நிலையத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களை திரும்ப போகுமாறு கூறினர்.

நெல், கரும்புக்கு ஆதார விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலவரையற்ற போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்