ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது - மத்திய அரசு

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:33 IST)
ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசு தொகுப்பிற்கு கொடுப்பது தான் விதி முறை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு வாதம் செய்த தமிழக அரசு, நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். ஆனால் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் முன்னுரிமை எங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்கின்றது. அத்தகைய முன்னுரிமையை கூட உங்களுக்கு வழங்க முடியாது என மத்திய அரசு வாக்குவாதம் செய்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்