ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூடும் என்றும், அன்றைய தினம் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆளுநர் உரை நிகழ்த்த இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறினார். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். ஒருவேளை தீர்மானம் கொண்டு வந்தால், அதைப் பற்றிய விவாதத்தை நிறைவேற்ற சட்டசபை தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.