இது அம்மா ஆட்சி இல்லை, சும்மா ஆட்சி - டி.ஆர் விளாசல்

புதன், 13 செப்டம்பர் 2017 (14:35 IST)
தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக அரசியல் பரபரப்பான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவிலிருந்தே ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் “ தற்போது நடப்பது அம்மா ஆட்சி இல்லை. இது சும்மா ஆட்சி.. யாரோ கீ கொடுக்கும் ஆடும் பொம்மை.. இதுவே உண்மை” என அடுக்கு மொழியில் பேசினார். 
 
மேலும், பீப் பாடலுக்கு எதிராக போராடியவர்கள், ஏன் அனிதா மரணத்திற்காக போராடவில்லை?. ஜெயலலிதாவின் ஆன்மாவும், அனிதாவின் ஆன்மாவும் எடப்பாடி அரசு மன்னிக்காது. 
 
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதாக பில்டப் கொடுக்கக்கூடாது. அவர்கள் அரசியலுக்கு வர விரும்பினால் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்