வைக்கோல் போரை நம்பலாம், வைகோவை நம்ப முடியாது: டி.ராஜேந்தர் சரவெடி
திங்கள், 18 ஜூலை 2016 (09:08 IST)
லட்சிய திமுக கட்சி தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கடுமையாக விமர்சித்தார்.
திருச்சியில் லட்சிய திமுகவின் செயற்குழுவில் கலந்து கொண்டார் அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் தோற்றதற்கு காரணம் வைகோ தான் என ஒரே போடாக போட்டார்.
வைக்கோல் போரை நம்பிக் கூட போகலாம், ஆனால் வைகோவை நம்பிப் போனால் தோல்விதான் என்றார். மேலும் வரும் தேர்தலில் லட்சிய திமுக தனித்து போட்டியிடும் என அறிவித்தார் டி.ராஜேந்தர்.