ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டமாகும். எனவே, இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது," என்று தெரிவித்துள்ளார்.
"வக்பு வாரிய திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என அந்த மாநில முதல்வர் கூறியது சரியானது அல்ல. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் இந்தியா முழுவதும் அமலுக்கு வரவேண்டும். ஏதேனும் ஒரு மாநிலத்தில் சட்ட அமல்படுத்தலில் சிக்கல் ஏற்பட்டால், சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்."
மேலும், அவர் கூறியதாவது: "குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோதும், மம்தா பானர்ஜி அதை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறினார். ஆனால், அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுபோல, நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை எந்த மாநிலமும் ‘அமல்படுத்த முடியாது’ எனச் சொல்லும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை."