தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்ததா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வியாழன், 7 பிப்ரவரி 2019 (11:18 IST)
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க சொல்ல உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்களிடம் பல ஆண்டுகளாக அறிமுகமாகியிருந்த இரட்டை இலையையும், உதயசூரியனையும் புதியதாக வந்த டிடிவி தினகரனின் குக்கர் வீழ்த்தியது. எனவே தனக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த குக்கரை நிரந்தர சின்னமாக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் 'குக்கர்' சின்னத்தை பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்குவது குறித்து உறுதி செய்ய முடியாது என்றும், சின்னம் ஒதுக்கும் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் கூறியது. இதனை ஏற்ற நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
 
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுகளில் தலையிட முடியாது என்றும், உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பிற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது எனவும் கூறிவிட்டது. ஆனால் இது சம்மந்தமான வழக்கை நான்கு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்