இந்த நிலையில் ரஜினிகாந்த் அங்கு மரணம் அடைந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனால் தமிழ் திரையுலகம், ஹாலிவுட், டோலிவுட் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதைவிட அவரது ரசிகர்கள் பலர் இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி உடல் நிலை குறித்து, தவறான தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை காவல்துறையில் ரஜினிகாந்த் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.