சதுரகிரி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை, மற்றும் பிரதோஷம் போன்ற நாட்களில் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று, புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
இன்றைய தரிசனத்தின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டதாகவும் கோவில் பரம்பரை அறக்கவலர் தெரிவித்துள்ளார்.