சென்னையில் குறைய தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

திங்கள், 17 மே 2021 (13:31 IST)
சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வருகிறது. வழக்கம் போல இந்த முறையும் சென்னையே அதிக பாதிப்புகளை சந்தித்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மே 12 ஆம் தேதியில் இருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இது சம்மந்தமான வரைபடம் வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்