சென்னையில் திடீர் மழை; அனல் காற்று ஜில் காற்றானது

செவ்வாய், 6 ஜூன் 2017 (15:24 IST)
சென்னையில் திடீரென பெய்த மழையால் அனல் காற்று தனித்து ஜில் காற்று வீசி வருகிறது. இதனால் வெப்பத்தில் வாடி வந்த சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


 

 
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வெயிலின் தாக்கத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
 
தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் மழை பெய்துக்கொண்டிருந்த நிலையில் சென்னையில் மட்டும் அனல் காற்று வீசி வந்தது. நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்வதற்கான அறிக்குறி இருந்தது. ஒரு சில இடங்களில் மழை தூறல் மட்டும் இருந்தது.
 
தற்போது திடீரென மழை பெய்தது. இதனால் சென்னை பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காலை முதல் அனல் காற்று வீசிய நிலையில் தற்போது மழை பெய்ததோடு ஜில் என காற்று வீசி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்