தமிழக ஆளுநர் ஆர்ன்.என் ரவி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற இருந்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதே விமானத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும் மதுரைக்கு பயணம் செய்ய இருந்ததார். இந்த நிலையில் ஆளுநரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது மற்றும் அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.