இதுவரை இளநிலை மருத்துவ கல்வியின் விதிமுறைப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் ஒரே மாதிரி தெரியாத மதிப்பெண் அல்லது சதவீதம் எடுத்திருந்தால் அவர்கள் உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பாட மதிப்பெண்ணும் ஒரே மாதிரியாக இருந்தால் வேதியல், அதற்குப் பின் இயற்பியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மூன்று பாடத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்திருந்தால் மூத்த வயது உடையவருக்கு தரவரிசையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றால் உயிரியல் பாடத்திற்கு பதிலாக இயற்பியல் பாடம் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை தர தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இயற்பியல் வேதியல் கடைசியாக உயிரியல் என்ற மதிப்பில் மதிப்பெண்களுக்கு முன்னுரை வழங்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படப்பட்டுள்ளது