இதையடுத்து, அவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர், சமத்துவபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் என்பது தெரிந்தது. இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிகண்டனை அவரது நண்பர்கள் தான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மனிகண்டனின் நண்பர்கள், மதுராந்தகத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எழிலரசன், பி.ஏ படித்து வரும் காமேஷ் மற்றும் தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் காவல்துறையினரிடம் கூறுகையில், " நண்பர் ஒருவரது மனைவியுடன் மணிகண்டன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை நாங்கள் கண்டித்தும் கேட்க வில்லை. எனவே அவனை கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் வீசினோம்'' என்றனர். மேலும், இந்த கொலையில் தலைமறைவாகயுள்ள முக்கிய குற்றவாளிகள் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.