தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும்: அரசுக்கு பெற்றோர் கோரிக்கை!

வெள்ளி, 4 ஜூன் 2021 (07:55 IST)
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் உத்தரப் பிரதேசம் குஜராத் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிளஸ் டூ தேர்வு ரத்து என்று அறிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர் 
 
தமிழக அரசு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கலந்து ஆலோசித்து வருகிறது 
 
இதில் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பிளஸ் டூ தேர்வு நடத்த வேண்டுமென்றும் உயர்கல்வி படிப்பதற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் அவசியம் என்றும் காலதாமதமானாலும் பரவாயில்லை பிளஸ் டூ தேர்வு நடத்தினால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் கூறி வருவதாக தெரிகிறது
 
எனவே இந்தியாவின் பல மாநிலங்களில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதேநேரம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த உடன் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. பிளஸ் டூ தேர்வு நடத்தப்படுவது குறித்து நாளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்