போதை மிட்டாய்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

J.Durai

வெள்ளி, 21 ஜூன் 2024 (17:03 IST)
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் படி திருச்செங்கோடு நகராட்சியில் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை தரும் மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நகராட்சி சுகாதார அலுவலர் என். வெங்கடாசலம் சுகாதார மேற்பார்வையாளர்கள் அருள்முருகன் கலைசிவன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
 
ஆய்வில் சந்தேகத்திற்குரிய காலாவதியான மிட்டாய் மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
நகரில் உள்ள நான்கு இடங்களில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலாவதியான பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூபாய் 10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. 
நகர் பகுதியில் பள்ளி சிறார்களுக்கு போதை தரும் மிட்டாய் வகைகள் புகையிலை தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபர்கள் மீது ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையர் இரா.சேகர் எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்