மகாசிவராத்திரியை முன்னிட்டு சாமி ஊஞ்சல் ஆடுதல், பூபந்தல், பூமாலை அலங்கரிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை யொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், நடராஜர் உற்சவ மூர்த்திகள் அழைப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து அங்காளம்மன் சாமியை அலங்கரித்து பழைய பஸ் நிலையம் வழியாக சிங்க வாகனத்தில் 1000.க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், ராசிபுரம், புதுப்பாளையம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், கட்டனசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் இதை காண வந்திருந்தனர்.