புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்று காலை 6:30 மணி முதல் தொடங்கியுள்ள போராட்டத்தால் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன, போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகிறது.