’ஸ்டாம்ப், ஸ்டிக்கர் சைஸ் போதை மாத்திரைகள் கடத்தல் ‘: ’ டிவி ஊழியர் ’ கைது

சனி, 9 மார்ச் 2019 (14:46 IST)
சென்னையில் இளைஞர்கள் பெண்கள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை விற்று வந்த கார்த்திக் என்பவனை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவன் கார்த்தி ஆனந்த் (27). சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள ஒரு தனியார் டிவி சேனலில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளான். 
 
வேலை நேரம் போக, ஆகல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்துள்ளான். இதை சென்னை போதை பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸார்  கண்டுபிடித்தனர்.
 
அப்போது அவனை தீவிரமாக கண்காணித்த போது, கோவாலில் இருந்து வாங்கிவந்த  போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் மற்றும் ஸ்டிக்கர் வடிவிலான  எம்.டி.எம்.ஏ என்ற போதை  மாத்திரைகளை சென்னை பகுதியில் அவன் விநியோகித்து வந்தது தெரிந்தது. 
 
இதனையடுத்து ஆலந்தூரில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த ஆனந்தை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்