தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “தண்ணீர் பற்றாகுறையை பற்றி அதிகாரிகள் கவலைப்படாததால் இன்று மக்கள் காலிக்குடங்களுடன் போராட வேண்டியுள்ளது. அதிமுகவினர் மழைக்காக யாகம் நடத்தவில்லை. தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே யாகம் நடத்துகிறார்கள். யாகம் நடத்துவது தவறில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இந்த தண்ணீர் பிரச்சினையை வைத்து ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிடுகிறாரா ஸ்டாலின்? என அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திமுக ஒரு குழு அமைத்திருப்பதாகவும், தமிழகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்ய தேவையான வியூகத்தை அவர்கள் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.