இதற்கு தமிழிசை, இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம் என பதில் அளித்தார்.
தற்போது தமிழிசையின் டிவிட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஸ்டாலின். அதாவது, சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கும் தமிழிசைக்கும் பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாகதான். ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன் என்று திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது.