கலக்கு கலக்குன்னு கலக்கிய ஸ்டாலின்: மிரண்டுபோன வடமாநிலம்; அடுத்த மூவ் என்ன?

செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:52 IST)
நேற்று நடைபெற்ற மூன்று மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் மிரட்டல் லுக்கில் சென்று அசத்தினார்.
ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலில் பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களும் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. 
 
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியை ஒழித்து, ராகுல் காந்தியை பிரதமராக்குவேன் என கூறினார். காங்கிரஸ் - திமுகவிடையே விரிசல் உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கூறியது எதிர்கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஸ்டாலின் இவ்வாறு கூறியது தேசிய அரசியலில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. வடமாநிலங்களில் இது தான் ஹாட் டாப்பிக். ஸ்டாலினின் இந்த முடிவை திமுக கூட்டணி கட்சிகள் சிலர் முன்மொழிந்தாலும் கூட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிகளில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்றார். வழக்கமாக இல்லாத லுக்கில் தோளில் கருப்பு துண்டுடன் இருந்தார் ஸ்டாலின்.
அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர சந்திரபாபு நாயுடு போல களமிறங்கியுள்ளார் ஸ்டாலின். மத்தியில் காங்கிரஸ் வந்துவிட்டால் அசால்ட்டாக தமிழக ஆட்சியை கைப்பற்றலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின். அதற்காக தீவிர களப்பணி ஆற்றிவருகிறார் அவர்..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்