குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின், கனிமொழி வீட்டிலும் கோலம்: பெரும் பரபரப்பு!

திங்கள், 30 டிசம்பர் 2019 (07:35 IST)
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மட்டும் அரசியல் கட்சிகள் போராடி வருவது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இந்த சட்டத்துக்கு எதிராக மாணவிகள் சிலர் நூதன போராட்டம் ஒன்றை நடத்தினர். வேண்டாம் குடியுரிமை சட்டம் என்ற வாசகங்களுடன் கூடிய கோலங்களை அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் அந்த மாணவிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்
 
இதனை அடுத்து நாளை அனைத்து திமுகவினர் வீடுகளில் கோலங்கள் போடப்படும் என்றும், போலீசார் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கலாம் என்றும் திமுக அறிவித்திருந்தது
 
இதனையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் இல்லம், திமுக எம்பி கனிமொழி இல்லாம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் ஆகிய இடங்களில் ’வேண்டாம் குடியுரிமை சட்டம்’ என்ற வாசகங்களுடன் கூடிய கோலங்கள் போடப்பட்டுள்ளது. இந்தக் கோலத்திற்கும் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்