இன்று ஐநாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது. இதனால் இந்தியாவின் வாக்கு பதிவு செய்யப்படவில்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தும் அதனை மதிக்காமல் இந்தியா வாக்கெடுப்பில் இருந்து வெளியே வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் ஐநா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது ஈழ தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கடுமையான விமர்சனம் மத்திய அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளதாக தெரிகிறது