திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் ஆரவாரம்

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (12:31 IST)
திமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கட்சியின் தலைவர் பதவியை யார் ஏற்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஸ்டாலின்தான் தலைவர் பதவியை ஏற்பார் என பேச்சு அடிபட்டாலும், திமுக தரப்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை.  
 
இதற்கு முன்னர் கடந்த 14 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரும் 28ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது.  
 
ஆகஸ்ட் 28 ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார். 
 
திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிறது. இப்போதுதான் அவர் திமுக தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார். இதுதான் பொதுக்குழுவில் நடக்கப்போகிறது என்பதால் சமூக வலைத்தளங்களில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்