தக்காளி சாதத்தில் ஸ்டெப்ளர் பின்.. தட்டிக்கேட்ட வாடிக்கையாளருக்கு அடி உதை..!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (17:08 IST)
தக்காளி சாதத்தில் ஸ்டெப்ளர் பின் இருந்ததாக தட்டி கேட்ட வாடிக்கையாளரை ஹோட்டல் ஊழியர்கள் அடித்து உதைத்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவாரூரில் காவல் நிலையம் அருகே ஸ்ரீ கணேஷ் ஹோட்டல்  என்ற ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் தக்காளி சாத பார்சல் ஒன்றை வாங்கி தனது மகனுக்கு கொடுத்துள்ளார். 
 
அதில் ஸ்டேப்ளர் பின் இருந்ததை பார்த்து அவர் சாப்பாடு போட்டாலத்துடன் சென்று கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கடை ஊழியர்கள் தங்கள் கடைகள் ஸ்டாப்ளர் பின் பயன்படுத்துவதில்லை என கூறி உணவுப் பொட்டலத்தை குப்பை தொட்டியில் வீசியதோடு தரக்குறைவாக பேசி தாக்கியதாக தெரிகிறது 
 
இது குறித்து வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்