ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை.. வலைகளை வெட்டி சேதம் என தகவல்..!

Mahendran

ஞாயிறு, 28 ஜனவரி 2024 (09:27 IST)
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்ததாகவும் வலைகளை சேதப்படுத்தியதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த பல ஆண்டுகளாக ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடிப்பதும் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. 
 
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தும் ஒரு சில நடவடிக்கைகளை தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததாகவும்  ஐந்து விசை படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்ததாகவும் ஒரு படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை வலைகளை வெட்டியதால் சேதம் ஏற்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்