நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு வாழ்த்து....டிவிட்டர் ஸ்பேஸில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்…

செவ்வாய், 22 ஜூன் 2021 (16:09 IST)
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டிவிட்டர் ஸ்பேஸில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிலையில்,   நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய்யின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று அவரின் 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தனர்.

இந்நிலையில் விஜய்யுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகர்கள் ஆகியவர்களை ஒருங்கிணைத்து விஜய்யின் மேனேஜர் ஜகதீஷ் டிவிட்டர் ஸ்பேஸில் ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். அதில் மொத்தமாக 23000 பேருக்கு மேல் கலந்துகொண்டார்களாம். ஆனால் ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாம்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்’’ தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்