பெண் ஐபிஎஸ் பாலியல் விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திங்கள், 1 மார்ச் 2021 (16:36 IST)
பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறப்பு பிஜேபி ராஜேஷ் மீதான ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் புகார் விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் அளிப்பதற்கே இப்படி அழைக்கப்பட்டால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என்றும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்