திரும்ப சென்னைக்கு வர இன்று முதல் சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

திங்கள், 23 அக்டோபர் 2023 (11:50 IST)
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வர இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



ஆயுத பூஜை விடுமுறைகளை தொடர்ந்து 4 நாட்கள் வருவதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இதுவரை 4.80 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விடுமுறை முடிந்து சென்னைக்கு பலரும் திரும்புவார்கள் என்பதால் மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் புதன்கிழமை வரை இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்