இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: வழிதடங்களின் விவரம் உள்ளே!!

திங்கள், 1 நவம்பர் 2021 (08:20 IST)
தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.  

 
ஆம், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 
 
மேலும் அரசு பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை 044 24749002 எண்ணிற்கு அழைக்கலாம், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிறப்பு பேருந்து வழிதடங்கள்: 
 
1. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 
 
2. கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
 
3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
 
4. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
 
5. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி  மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 
 
6. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்  (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  அரியலூர், திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இயக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்