மொபைலை சுவிட்ச் ஆப் செய்த டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்: அதிர்ச்சி தகவல்

புதன், 1 ஏப்ரல் 2020 (08:21 IST)
மொபைலை சுவிட்ச் ஆப் செய்த டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
சமீபத்தில் டெல்லியில் நடந்த மத மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த நபர்களிடம் தொடர்பு கொள்ள முயன்றபோது ஒரு சிலர் பொறுப்பான பதில் அளித்ததாகவும் அவர்கள் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் ஆனால் இன்னும் ஒரு சிலரோ தங்களுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு த்இருப்பதாகவும் அவர்களால் கொரோனா வைரஸ் மிக அதிகமாக மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது
 
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கே சண்முகம் அவர்கள் கூறியபோது ’டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய சிலர் தங்கள் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் வேண்டுகோளுடன் தெரிவிப்பது என்னவென்றால் தயவு செய்து உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தங்கள் சோதனை பற்றிக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்