பிஎஸ்பிபி பள்ளி கெவிராஜ் மீது மேலும் சில மாணவிகள் புகார்: இறுகும் போலீஸ் பிடி

செவ்வாய், 1 ஜூன் 2021 (11:43 IST)
பிஎஸ்பிபி பள்ளி கெவிராஜ் மீது மேலும் சில மாணவிகள் புகார்: இறுகும் போலீஸ் பிடி
சென்னை அண்ணா நகரில் ஜூடோ கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி பள்ளியை நடத்தி வந்தவர் கெவிராஜ் அண்மையில் சர்ச்சையில் சிக்கிய பிஎஸ்பிபி பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார் 
 
இந்த நிலையில் கேரள பெண் ஒருவர் தாம் கெவிராரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக போலீசாரிடம் புகார் அளித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளிக்கு ஜூடோ போட்டிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு வந்ததாக தெரிவித்துள்ள கேரள பெண், அப்போது கெவிராஜ் தொடர்பு கிடைத்து அவரது பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஜூடோ கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்
 
ஒருமுறை நாமக்கல்லில் நடந்த ஜூனியர் போட்டியில் கலந்துகொள்வதற்காக அழைத்துச் சென்று திரும்பும் வழியில் கெவிராஜ் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பல சந்தர்ப்பங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அந்த கேரள பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கெவிராஜை கைது செய்துள்ளனர்
 
இந்த நிலையில் கெவிராஜ் மீது மேலும் சில மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும் இதனால் கெவிராஜ் மீது போலீஸ் பிடி இறுகுவதாகவும் கூறப்படுகிறது. இவர் தான் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பதுதான் இதில் வேடிக்கை என போலீசார் கூறுகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்