காரில் மதுபாட்டில்கள் கடத்தல் ...போலீஸார் பறிமுதல்

செவ்வாய், 7 ஜூன் 2022 (19:45 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, போலீஸார் சோதனை செய்தனர்.  அந்தக் காரின் சீட்டிற்கு அடியில் சுமார் 30 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது. அதைக்கைப்பறிய போலீஸார்  காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

காரை ஓட்டி வந்த சுதாகர்(22) காதணி விழாவுக்காக மதுபபாட்டில்கள் கடத்திச் சென்றதாகக் கூறினார்,  அதன்பின்ம் மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்று. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்