நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு செலவை ஏற்று கொண்ட பிரபல நடிகர்

வியாழன், 6 டிசம்பர் 2018 (10:35 IST)
தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது உடல் நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யவிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவு முழுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் நெல்ஜெயராமனின் மகனின் முழு கல்வி செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நெல் ஜெயராமனின் சிகிச்சைக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்த சிவகார்த்திகேயன், தற்போது அவரது மகனின் படிப்பு செலவையும் ஏற்று கொண்டது பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்