அதேபோல் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களை தொடர்ந்து சென்னை உள்பட இன்னும் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை ஈயக்கி வருகின்றனர். சென்னையை பொருத்தவரை நேற்றிரவும் இன்று அதிகாலை முதலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சைதாப்பேட்டை, அசோக்நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது