தீபாவளி என்றாலே தி நகர் ரங்கநாதன் தெருவில் ஆள் நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் களை கட்டும். செருப்பு முதல் துணிமணிகள், நகைகள் உள்பட அனைத்து பொருள்களையும் இந்த ஒரே தெருவில் கிடைக்கும் என்பதால் ஒட்டுமொத்த சென்னை மக்களும் ரெங்கநாதன் தெருவில் தீபாவளி பர்சேஸுக்கு குவிந்து வருவார்கள்
தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்னரே ஆன்லைனில் உள்ள பெரிய நிறுவனங்கள் 7,000 கோடி 8000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து முடித்துவிட்டனர். இதனால் மக்களின் கையில் சுத்தமாக காசே இல்லை. மேலும் தேவையான எல்லாப் பொருள்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டனர். இதனால் தி நகர் உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் கஷ்டப்படும் நிலையே உள்ளது
இப்படியே சென்றால் அடுத்த வருடம் திநகரில் உள்ள ரங்கநாதன் தெருவே இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது என வியாபாரிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைன் வியாபாரத்தால் அரசுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை. ஆனால் திநகரில் உள்ள வியாபாரிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம் தருகின்றனர்
இந்த நிலையில் அரசு ஆன்லைன் வியாபாரத்தை கட்டுப்படுத்தி வியாபரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மக்களின் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருப்பதாகவும் வேலைவாய்ப்பு குறைவு, ஜிஎஸ்டி உள்பட பல பிரச்சனை காரணமாக வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்