அத்திவரதரை அசிங்கமாக பேசிய டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்! – மக்கள் கொந்தளிப்பு!

சனி, 19 அக்டோபர் 2019 (16:53 IST)
கோயம்புத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய துணிக்கடை உரிமையாளர் இந்து கடவுள்களை கேவலமாக பேசியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோயம்புத்தூரை அடுத்த சிறுமுகை என்ற ஊரை சேர்ந்தவர் காரப்பன். ’காரப்பன் சில்க்ஸ்’ என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர் சமீபத்தில் திராவிடர் கழக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அத்திவரதர் மற்றும் கிருஷ்ணன் போன்ற இந்து கடவுளர்களை மிக கீழ்தரமாக அவர் பேசியதாக கூறப்படுகிறது. ‘ஆற்றில் உள்ள மணல்களை கூட அள்ளிவிடலாம். கிருஷ்ணனின் மனைவிகளை எண்ண முடியாது. அத்திவரதர் என்ற பெயரில் மூன்று மாதமாக காஞ்சி நெசவாளிகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்’ என்று பேசியுள்ளார்.

இதனால் காரப்பனுக்கு எதிராக மக்கள் பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்து கடவுளர்களை கேவலமாகவும், ஒருமையிலும் பேசியதற்காக காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவரது கடையை புறக்கணிக்க போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்