ஸ்மார்ட் போனில் அதிக நேரம் மூழ்கினால் பல நோய்கள் ஏற்படும் ! ஆய்வில் தகவல்

சனி, 27 ஜூலை 2019 (21:24 IST)
இன்றைய இணைய உலகில் ஸ்மார்ட் போன் கையில் இல்லாத மக்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. பிறந்த குழந்தையில் செல்போன் இல்லாததுதாம் ஆச்சர்யம்.
இந்நிலையில் அதிக நேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் நபர்களுக்கு உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகும் என்று ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
நவீன உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்களால் ஏற்படும் மாற்றம் குறித்து 19 வயது முதல் 20 வயதுக்குட்பவர்களிடம் கொலம்பியா நாட்டின் சிமோ  போலிவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 300 பெண்கள் மற்றும் 700 ஆண்களிடம் நடத்தப்பட்டது. இதில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு மனரீதியான பாதிப்புகள், மற்றும்  உடல் ரீதியான பாதிப்புகள் உண்டாகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்