’பிரபல ஸ்மார்ட் போனில் ’ இனிமேல் ஃபேஸ்புக் இருக்காதாம் ! ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி...

சனி, 8 ஜூன் 2019 (18:46 IST)
ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி என்று கூகுள்  நிறுவனம் முதலில் தெரிவித்தது. இந்நிலையில் இனிமேல் தங்களின் ‘ஃபேஸ்புக் பிரீ ஆப்’ ஹுவாயின்   ஸ்மார்ட் போன்களில் வராது என்று ஃபேஸ்புக் நிறுவனம்    தெரிவித்துள்ளது. இது ஹூவாய் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி என்று கூகுள்  நிறுவனம் முதலில் தெரிவித்தது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.
 
அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாய் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ஆணையுடன் இணைந்து செயல்படுவதாகவும், விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹுவாய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
மேலும், 5ஜி மொபைல் நெட்வொர்க்குகளில் ஹுவாய்யின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அதாவது ஏற்கனவே விற்பனையான ஹூவாய் செல்போன்களைப் பயன்படுத்துவோர் ஃபேஸ்புக் செயலிகள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த செயலிகளுக்கான புதிய அப்டேட்களும் கிடைக்கும்.
 
ஆனால் இனிமேல் வெளியாகும் ஹூவாய் ஸ்மார்ட் போன்களில் ஃபேஸ்புக் , வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை பிரீ இன்ஸ்டால் ஆகாது என்று என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
மேலும் பல்வேறு நாடுகளில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட் போன்களில் டுவிட்டர், புக்கிங் காம் போன்ற முக்கியமான செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்து வழங்கப்படுகின்றன. ஆனால் இதுகுறித்து எந்த தகவலும் புக்கிங் ஹோல்டிங்ஸ் சார்பில் வழங்கபடவில்லை என்று தெரிகிறது.
 
இந்நிலையில் ஃபேஸ்புக் நிருவனத்தின் இந்த முடிவு ஹூவாயின் விற்பனையைப் பெரிது பாதிக்கும் என்று கூறப்படுகிறது.  ஹூவாய் நிறுவனம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதிகளவு விற்பனை செய்ய பதிவு செய்தநிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஹூவாயின் விற்பனையைப் பாதிக்கும் என்று தகவல் வெளியாகியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்